கொள்கலன்களில் தோட்டம்

வணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம்.

இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் இது செடி வளர்க்க கூடுதல் இடத்தை கொடுக்கின்றது. இதில் அப்படி என்னதான் பெரிதாக வளர்த்திட முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்! எல்லாமே வளர்க்கலாம் என்பது தான் இங்கு நமக்கு கூடுதல் அனுகூலம். ஆம் முளைக்கீரையிலிருந்து பழங்காய்க்கும் மரம் வரை இந்த முறையில் எல்லாமே வளர்க்கலாம்.

கேட்க நல்லாருக்கு இல்லையா? சரி அப்படியே இதற்கான சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம். தொட்டிகளில் அல்லது கொள்கலன்களில் தோட்டம் அமைப்பதற்கு நாம் முக்கியமாக 5 விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  1. இடம்
  2. நீர் ஊற்றுதல்
  3. சிறந்த கொள்கலன்கள்
  4. வடிகால்
  5. வளர்க்கும் மண்

நாம் ஒன்றொன்றாக பார்ப்போம். … Continue reading

Advertisements

​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)

மல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும். … Continue reading

மல்லிகை வளர்ப்பு பாகம்-1

மல்லிகை நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மலர். அதனுடைய நறுமணம் மற்றும் அழகிய சிறிய வெள்ளை மலர்கள் அனைவரையும் கவரக்கூடியவை.

இந்தியவில் பொதுவாக மூன்று வகையான மல்லிகை பூக்கள் உண்டு. … Continue reading

உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.

… Continue reading

இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

முதலாவது நீங்கள் எங்கள் கடந்த பதிவுக்கு அளித்த பெரும் வரவேற்பிற்காக நன்றி! அதனால் அடுத்த செடியின் வளர்ப்பு பற்றின பதிவிற்கு போகுமுன் நீங்கள் எங்களிடம் கேட்டதை உங்களுக்கு அளிக்க விரும்பினோம் அதுவே இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க இஞ்சி செடிக்கு வரும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அவற்றை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றியும் பார்ப்போம். (குறிப்பு: இந்த பதிவு சிறிது நீளமாக உள்ளது அதற்காக எங்களை மன்னியுங்கள், உங்களுக்கு அனைத்தும் தெரிய வரவேண்டும்… Continue reading இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

இஞ்சி வளர்ப்பு

 

(Zingiber officinale) வளர்ப்பது அநேகருக்கு ஒரு புதிராகவே இருக்கலாம். இதற்கு சாட்சியாக இஞ்சியை நாம் பொதுவாக கடைகளில் பார்க்க முடியும் ஆனால் நர்சரிகளில் அச்செடியினை காண முடியாது. சரி இப்போது இஞ்சியை வீட்டில் வளர்க்க முடியுமா முடியாதா? விடை முடியும் என்பதே! அதுமட்டுமல்லாமல் அதை வளர்ப்பது எளிதானதும் கூட. வாருங்கள் எப்படி இஞ்சியை வீட்டில் வளர்ப்பது என பார்ப்போம். … Continue reading

புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

புவி தினம் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வாக 192 நாடுகளுக்கு மேல் எற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. புவிக்காக ஒரு சிறப்பு தினத்தை அற்பனிப்பது நாம் நமது உலகத்தின் எதிர் காலத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என நிரூபிக்கிறது. நீங்கள் அனைவரும் எதேனும் ஒரு வழியில் புவி தினத்தில் பங்கு பெறலாம். மரக் கன்று நடுதல், அக்கம் பக்கத்தில் விளைந்த காய் கறிகளை கொண்டு… Continue reading புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்