உருளைக்கிழங்கு வளர்ப்பு (பாகம்-2)

இடம்:
உருளைக்கிழங்கு வளர்ப்பதற்கு இடம் திறந்த வெளியாகவும் சூரிய ஒளி அதிகம் படும் வகையிலும் இருக்க வேண்டும். உருளைக்கிழங்கிற்கு வளமான மற்றும் நன்றாக வடிகால் இருக்கக் கூடிய நிலமாக இருக்க வேண்டும். இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலாக உருளைக் கிழங்கு விளைந்த இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லதில்லை ஏனென்றால் நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு அதில் அதிகம். காரத் தன்மை (alkaline) அதிகம் இருக்கக் கூடிய நிலமானது உருளை வளர்ப்பிற்கு நல்லது.

முளை கட்டுதல்:
உருளைக்கிழங்குகளை மிதமான குளிர்ச்சி மற்றும் ஒளி இருக்கக்கூடிய இடத்தில் சில தினங்கள் வைத்தால் முளை கட்ட தொடங்கி விடும். இதன் மூலம் பலமான தண்டுகள் வளரும் மேலும் நிலத்தில் நட்ட பிறகு செடி வேகமாகவும் வளரும்.

செடி நடுதல்:
முளை கட்டிய உருளைக்கிழங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் இருந்தாலும் எல்லாமே நன்றாக வளரும். தட்ப வெப்ப நிலை மற்றும் நிலத்தின் தன்மை பொறுத்து செடிகளை நடலாம். 10 செமீ ஆழத்திற்கு குழி தோண்டி முளை கட்டிய உருளைக்கிழங்குகளை முளை மேல் நோக்கி இருக்குமாறு அதில் நட வேண்டும். குழிக்குள் நன்றாக மண் அடைத்து உருளைக்கிழங்குகள் அதில் புதையுமாறு செய்ய வேண்டும்.

பாதுகாத்தல்:
தண்டுகள் நிலத்தின் மேல் வரத் தொடங்கும் பொழுது பனி தண்டுகளின் நிறத்தை கருமையாக்கி உற்பத்தியை பாதிக்காமல் தடுக்க மண் கொண்டு அவற்றை மூடுவது நல்லது.

நீர் பாய்ச்சுதல்:
உருளைக்கிழங்குகள் விளையும் மண் ஈரமானதாக இருக்க வேண்டும் அதோடு ஈரப்பதமும் தொடர்ந்து இருக்க வேண்டும். 1 அல்லது 2 அங்குல அளவிற்கு நீர் இருப்பது அவசியமாகும்.

அறுவடை செய்தல்:
எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்பது தட்ப வெப்பம் மற்றும் மண்ணின் தன்மை கொண்டு வேறுபடும். செடிகள் பூக்கத் தொடங்கியவுடன் அறுவடை செய்யலாம். இதற்கு 10 முதல் 15 வாரங்கள் அகும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இருந்தால் எங்கள் பக்கத்தை விரும்புங்கள், பகிருங்கள், உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுங்கள்!

மறக்காமல் எங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channel/UCzpbijxxy6XXTcmeYKMt9CA

மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைதளத்தை தொடருங்கள்!https://anybodycanfarm.wordpress.com/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s