பயங்கரமான கோலா பால்

​#Poornima ram post

Fair life என்னும் பதப்படுத்தப்பட்ட பால் பெங்களூரு ஷாப்பிங் மால்களில் சமீபத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது. 

இந்தப் பாலில் அப்படியென்ன விசேஷம்? 

இந்தப் பாலில் 50% அதிக புரோட்டீனும், 30% அதிக கால்சியமும், 50% குறைக்கப்பட்ட சர்க்கரையும் உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட விஷேசமான செய்தி  இதை தயாரிப்பது கோக கோலா நிறுவனம் என்பதுதான்! (இந்த நிறுவனத்தைப் பற்றி எழுதத் துவங்கினால் தட்டச்சு செய்து என் விரல்கள் ஓய்ந்து போய்விடும். அதைப் பின்னால் ஒருநாள் பிரித்து மேயலாம்.இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்)
கோககோலா நிறுவனத்தின் வட அமெரிக்க நிர்வாகி சேண்டி டக்ளஸ் கூறுகிறார்,

 ‘ஆசியச் சந்தையில் இந்தப் பால் விற்பனைக்கு வரும் போது கோலா நிறுவனம் பணமழையில் நனைந்து கொண்டிருக்கும். சாதாரண பாலை விட இரண்டு மடங்கு விலையில் நம்மால் அங்கு இந்த பதப்படுத்தப்பட்ட பாலை விற்பனை செய்துவிட முடியும். ஆனால் விளம்பரங்களின் மூலம் நாம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். முக்கிய நிகழ்வுகளின் விளம்பரத் தூதராக  நாம் மாற வேண்டியது அவசியம். அதற்கு முன் பண்பாடு சார்ந்த விஷயங்களில் இருந்து மக்களை வெளியே கொண்டு வர வேண்டியது முக்கியமான பணி.’ 
சரி…அவர்கள் வியாபாரத்தை வளர்க்க அவர் பேசுகிறார். தொலையட்டும்.
இந்தப் பாலின் இலட்சணம் பற்றியும் நாம்  கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

     The china study என்பது ஒரு ஆய்வின் பெயர். அதைச் செய்தவர் காலின் கேம்ப்பல் என்பவர்.இந்தப் பாலை அவர் எலிகளிடம் பரிசோதனை செய்கிறார்.இந்தப் பாலில் இருக்கும் 50% அதிக புரோட்டீன் எலிகளுக்கு கேன்சர் நோயை வரவைக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் பதப்படுத்தப் படாத சாதாரண மாட்டுப் பாலை அந்த கேன்சர் பாதித்த எலிகளுக்கு மீண்டும் தந்து பரிசோதனை செய்கிறார். இப்போது அந்த எலிகளுக்கு கேன்சர் குணமடையா விட்டாலும் எதிர்ப்புத் திறன் கூடுவதைக் காண்கிறார்.
“From Grass to Glass” என்ற அவரது ஆய்வின் முடிவு இப்படிக் கூறுகிறது. 

‘ பாலை பதப்படுத்துவதாகக் கூறி அதில்  சர்க்கரையைக் குறைக்கிறேன்,புரோட்டீனை அதிகப் படுத்துகிறேன் ,கால்சிய அளவினைக் கூட்டுகிறேன்  என்ற பெயரில் வேதியியல் வினைகளுக்கு உட்படுத்துவது கேன்சரில் கொண்டு வந்து விடுகிறது. பாலை இயற்கையாக எந்த வேதிவினைகளுக்கும் உட்படுத்தாமல் உண்பது மட்டுமே சரியானது.’

     Fair life பால் The “real food” movement என்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்த விற்பனை சர்வாதிகாரத்திற்கு எதிராக நம்மால் என்ன செய்துவிட முடியும்?

       நாட்டு மாடுகளை இன்னும் வைத்துக் காப்பாற்றி வரும் நம் விவசாயிகளை இந்தச் சூறையாடலில் இருந்து எப்படி நாம் மீட்கப் போகிறோம்?
ஜல்லிக்கட்டுத் தடை  என்பது கண்ணிற்குத் தெரியாத சிக்கலின் ஒரு முனை மட்டுமே!
மல்லுக்கட்டித் தான் தீர வேண்டும்! 

நம்மால் முடியும் !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s