கேரட் வளர்ப்பு

வணக்கம்!

(இது ஒரு இரு மொழி பதிவு. இந்த பதிவை தமிழில் காண இங்கே க்ளிக்(Click) செய்யவும்)

குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம்.mini-cenoura
ஏன் கேரட்?
• கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை.

எப்போது வளர்க்கலாம்?
• மஞ்சள் முள்ளங்கிகள் குளிர் காலத்தில் நன்றாக வளரும்.
• வசந்தத்தில் இரு வாரங்கள் இடைவேளையில் (பயிர் செய்து கொண்டே இருக்கலாம்.
• கோடையில் இவைகளை வளர்ப்பது பரிந்துரைக்கதக்கது அல்ல.

எந்த மண்ணில் வளர்க்க வேண்டும்?
• கேரட்டுகள் வளர தளர்வான, தண்ணீர் வடிய கூடிய மண் தேவை. கற்களோ மண்கட்டிளோ இருந்தால் அவை கோணல் மாணலாகவும் பிளவுகளுடனும் வளரும்.
• சரிவான நில பரப்புகளில் வளர்ப்பதே சரியானது.raised-bed-01
• அதிக அமில(acidity) தன்மை வாய்ந்த மண்ணில் இதை வளர்க்க கூடாது. சராசரியாக 6-6.8 கார(pH) அளவு கொண்ட மண்ணையே பயன்படுத்த வேண்டும்.
• கேரட்டுகள் வேர் வகைகள் ஆதலால் நிறைய நைட்ரஜன் உரங்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

வளர்க்கும் முறை:

carrot seeds

• கேரட் விதைகளையும்(கேரட் விதைகளா? என்று யோசிக்கிறீர்களா? முதலில் நாங்களும் இதையே தான் யோசித்தோம்) போதுமான அளவுடைய தொட்டிகளையோ, சன்னல் பெட்டிகளையோ (window boxes) வாங்கிக்கொள்ளுங்கள். அவற்றில் நீர் வடிவதற்கு துளைகள் இருப்பது மிக முக்கியம்.
• பின்பு தொட்டிகளை நல்ல (இயற்கை) உரம்-மண் கலவையால் நிரப்ப வேண்டும். தொட்டியின் வாயிலிருந்து ஒரு அங்குலம்(inch) விட்டு மீதம் முழுதும் கலவையால் நிரப்ப வேண்டும்.
• விதைகளை மென்மையாக, மண்ணில் ஒரு அங்குலம் (inch) ஆழத்திற்கு அழுத்தி, ஒரு மெல்லிய அடுக்கு மண்ணால் மூடவும்.
• விதைகளை வரிசையாக ஒவ்வொன்றுக்கும் இடையே 6-அங்குலம் (inch) இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.
• தொட்டிகளை நிறைய சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடங்களில் வைக்க வேண்டும்.
• மணணில் எந்நேரமும் ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீர் தேங்கவும் கூடாது.21-811x1024
• ஈரத்தை தக்க வைக்க பீட் பாசியை(peat moss) நீரில் தோய்த்து விதைகளுக்கு மேற்பரப்பில் போட்டு வைக்கலாம்.
• இரண்டு வாரங்களில் விதைகள் முளைக்கும் என எதிர்பார்க்கலாம்.

அறுவடை:harvest-carrot

• கேரட்டுகள் நிலத்தின் மேல் தண்டின் கீழ் முக்கால் அங்குலம் அளவு வரை தெரிய ஆரம்பித்தால் அவை அறுவடைக்கு தயார் என அர்த்தம்.
• உங்களால் பார்க்க முடியாவிடின் தண்டைச் சுற்றி சிறிது மண்ணை தள்ளி பார்க்கலாம்.easiest-vegetables-to-grow-at-home1376372302-aug-11-2012-1-600x400
(குறிப்பு: நீங்கள் கேரட்டுகளின் முழுதான அளவை காண ஆவலாய் இருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்தால் கேரட்டுகள் முழுமையான அளவை அடையாது.)

• கேரட்டுகளை அறுவடை செய்ய அவைகளை மொத்தமாக பிடித்து பிடுங்க வேண்டும். ஒரு வேளை பிடுங்க கடினமாக இருந்தால் மண்ணில் நீர் செலுத்தி சிறிது (ஓரிண்டு மணி நேரம்) நேரம் கழித்து பிடுங்க வேண்டும்.
• கேரட்டுகளை பிடுங்கியவுடன் அதின் பச்சை பாகங்களை(தண்டு, இலை) அரிந்துவிட்டு, கழுவி, உல்ர்த்தி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்.

தாக்கும் பூச்சிகள்:
(i) கேரட் துரு ஈக்கள்
கேரட்டுகளை தாக்கும் முக்கியமான பூச்சிகளுள் ஒன்று கேரட் துரு ஈக்கள்(Carrot rust fly). இவை அனைத்து இடங்களிலும் காணப்படாவிட்டாலும் மித வெப்ப பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. முக்கியமாக இவற்றின் லார்வாக்கள் கேரட்டுகளுக்குள் துளையிட்டு அவற்றின் சந்தை மதிப்பை குறைத்து விடுகின்றன.carrot_fly_01

அவற்றை கையாளும் முறை:
1) பயிர் சுழற்சி முறையை கையாளலாம். கேரட் குடும்பத்திலேயே இதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் பயிரிடும்போது இடங்களையும் ரகங்களையும் மாற்ற வேண்டும்.k11611-1
2) ரோ கவர்(Row cover) எங்கிற முறையை கையாளலாம். இதில் விதை முளைத்தவுடன் மெல்லிய கொசு வலை போன்றவற்றால் முளைகளை மூட வேண்டும். வலைகளின் ஓரங்களை மண்ணில் புதைப்பது நல்லது.img_0056

(ii) கம்பி புழுக்கள்(Wire worms)
இவை க்ளிக் பீட்டில்ஸ்(click beetles) எங்கிற ஒரு வகையான விட்டில் பூச்சி வகையின் 354902லார்வாக்கள் ஆகும். இவையும் கேரட்டுகளை துளையிட்டு அவற்றை நாசமாக்குகின்றன.
இவற்றை கையாளும் முறை:
1) மேற்கூறிய இரு முறைகளையும் கையாளலாம்.
2) அறுவடைக்கு முன்னும் பின்னும் மண்ணை உழுவதன் மூலமாகவும் புழுக்களை அகற்றலாம். இப்படி செய்யும் போது அவை பறவைகளிடமும் அகப்படுகின்றன.
இந்த பதிவில் பயனடைந்திருப்பீர்க்கள் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை லைக்(like) செய்யுங்கள், பகிருங்கள், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். கடந்த பதிவில் (செடி வளர்க்கும் கோப்பைகள்) அனைவரும் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி! மேலும் தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள். நன்றி!

One thought on “கேரட் வளர்ப்பு

Leave a comment