​சாதி வெறியால் “காவிரியை” இழந்த தமிழன்.!!! (ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டிய பதிவு)

அன்பிற்கினிய தமிழர்களே ஒரு
வருத்தத்தை உங்கள் மத்தியிலே

பதிவு செய்ய விரும்புகிறேன்.
“காவிரி” என்பது தமிழனுக்கு

சொந்தமான நதி,அதை அவன்

வரலாற்றிலே இழந்தான்.?

அது ஏன் தெரியுமா.?
ஆம்.! தமிழன் காவிரியை சாதிய

பற்றால் இழந்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..
சில மறைக்கப்பட்ட குண்டுகள்

இப்பொழுது வெடிக்கபோகின்றன.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது என்ன நடந்தது

தெரியுமா.??
நமது தமிழ்த்தாய் வாழ்த்திலே

நிறைய வரிகள் இருக்கும்..அதுவே

நம்மில் பலருக்கு தெரியாது
அதில் அழகாக கவிஞர் சொல்லுவார்,
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா எழுந்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
அன்னை தமிழே.! உன்னிடத்தில் இருந்தே கன்னடமும்,தெலுங்கும்,

மலையாளமும்,துளுவும் பிறந்தன..
ஆயினும் நீ இன்னும் இளமையோடு இருக்கிறாயே,என்னே உன் சிறப்பு என கவிஞர் குறிப்பிடுகிறார்
இதில் “துளு” என்கின்ற சொற்றொடரை கவனித்தீர்களா.!!
திராவிட மொழிகள் எத்தனை என கேட்டால் பொதுவான கருத்து நான்கு என்பதுவே..ஆனால் மெய்யில் திராவிட மொழிகள் ஐந்து.! அவை,
1)தமிழ்

2)தெலுங்கு

3)கன்னடம்

4)மலையாளம்

5)துளு
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் ஒவ்வொரு மாநிலம் என முடிவு செய்யப்பட்டது.
அப்போது மற்ற மொழிகளுக்கு எல்லாம் மாநிலம் பிரிந்து தந்தாகிவிட்டது,ஆனால் துளு மொழி பேசுபவர்கள் சிறுபான்மையினராக இருந்தமையால் அவர்களுக்கென தனி மாநிலம் அமைப்பதில் சிக்கல் எழுந்தது.
முடிவாக இந்த நான்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நீங்கள் இணைந்து கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டபோது “துளு” மொழி பேசுகிற மக்கள் நாங்கள் தமிழ்நாட்டோடு இணைந்து கொள்கிறோம் என அவர்கள் வந்தார்கள்.
ஆனால் நாம் அவர்களை சாதிய உணர்வோடு அன்று எதிர் கொண்டோம்,தமிழ்நாட்டில் உள்ள சாதிகளுக்கு சற்றும் நிகரில்லாத ஒரு சாதியினை நாம் இணைத்து கொள்வதா என யோசித்தோம்.
சாதாரண மலைவாழ் மக்களை

நாம் ஏன் ஏற்றுகொள்ள வேண்டுமென பார்த்தோம் சாதிய தலைவர்கள் பின்வாங்கினார்கள்.

அதனால் அன்றைக்கு நம்மை நாடி வந்த துளு மொழி பேசுகிற மக்களை நாம் சாதிய பார்வையோடு

ஏற்றுக்கொள்ளாமல்

தள்ளி வைத்தோம்.
பின் வேறு வழியில்லாமல் அவர்கள் கருநாடாகாவில் இணைந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம்,

துளு மொழி பேசுகிற மக்களின்

மலை தான் “குடகு மலை”
அக்குடகு மலையில் தான் காவிரியாறு உற்பத்தி ஆகிறது,

பின் தமிழ்நாட்டை வந்து சேர்கிறது
அன்றைக்கு அம்மொழி பேசுகிற மக்களை நாம் ஏற்று

கொண்டிருந்தோம் எனில்

“காவிரி” தமிழ்நாட்டின் எல்லை பகுதிக்குள் இருந்திருக்கும்.
இன்று தமிழன் தண்ணீர் பிச்சை கேட்கின்ற நிலைமை வந்திருக்காது,ஆனால் நம் சாதிய உணர்வு நமக்கு இவ்வளவு பெரிய

இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது

எனில் அப்படிப்பட்ட சாதி நமக்கு தேவையா என நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இப்பிரச்சினை நடந்து

கொண்டிருக்கும் போது துளு மொழி பேசும் மக்களிடையே இணங்கிப்பேசி அவர்களை கருநாடகாவோட இணைத்த விஞ்ஞானியின் பெயர் தான்

“விஸ்வேஸ்வரய்யா” அதுவே

நமக்கு தெரியாது.
இன்றும் அரட்டை அரங்கம்

போன்ற மேடை பேச்சுகள் கருநாடகாவில் நடக்கும்போது

விஸ்வேஸ்வரய்யாவை பற்றி பெருமையாக தமிழர்களே பேசுவதை நாம் காணலாம்
அவர் என்ன செய்தார் என்பதே பேசும் பலருக்கு தெரியாது.
ஆக நாம் அவர்களை சாதிய பார்வையால் தள்ளி வைத்த காரணத்தினாலே காவிரி கருநாடகாவில் இணைந்தது
விளைவு தமிழ்நாட்டில் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் சூழ்நிலை எழுந்திருக்கிறது.
“சோழவளநாடு சோறுடைத்து”

என சொல்வார்கள்..விவசாயம் என்றால் என்னவென உலகிற்கே

கற்றுகொடுத்தவர்கள் இன்று விவசாயத்தயே கைவிடும் நிலைமை வந்துள்ளது.
இன்று வீடுகளில் நாமே கருநாடக பொன்னி வாங்கி வாருங்கள்,நாட்டு பொன்னியா அது வேண்டாம் என சொல்கின்ற அளவிற்கு நிலை மோசமாகியுள்ளது தமிழர்களே.!
தமிழ்நாட்டில் விவாசயம் செத்துகொண்டிருக்கும் இதே நேரத்திலே கருநாடகா காவிரியை தனது வட எல்லை வரை திருப்பி விவசாயத்தை மிக அழகாக விரிவுபடுத்தி இருக்கிறது.
பாருங்கள்.! நமது சாதிய வெறியின் காரணமாக எவ்வளவு பெரிய இழப்பு நமக்கு நிகழ்ந்திருக்கிறது.
தமிழினத்திற்கு உள்ள ஒரே சாபக்கேடு இந்த சாதி..இதை மட்டும் விட்டுவிட்டு நாம் வெளியே வந்துவிட்டோம் என்றால் நம் மாநிலம் ஒரு உன்னதமான நிலைக்கு வந்துவிடும் என்பதில் சிறு ஐயமுமில்லை..
நன்றி தி.கோ..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s