​என்ன கிடைத்தது அந்த ஏழை உழவனுக்கு?

 

இப்புவியில் மானிட இனம் தோன்றிய பொழுது அவனுடன் தோன்றியது பசி.அப்பசியை போக்க அவன் மரங்களில் தொங்கும் கனிகளை புசித்தான். விலங்குகளை வேட்டையாடி உண்டான்.
பின்னாளில் நிலத்தை உழுது தனக்கு தேவையானவற்றை விதைத்து பசியாறக் கற்றுக்கொண்டான்.
செயல் – விவசாயம்.

செய்பவன் – விவசாயி.
விவசாயம். உலகிற்கே சோறு போடும் உன்னத தொழில். தொழில் என்று சொல்வதற்கு பதில் சேவை எனலாம்.

அது எவ்வாறு சேவை ஆகும்…? என்ற கேள்வி எழலாம்.
தொழில் எனும் பட்சத்தில் அதற்கு ஒரு கணிசமான இலாபம் இருக்க வேண்டும். அவனுக்கு அது மேலும் மேலும் வளர்ச்சி தர வேண்டும். அவனது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால் வானம் பார்த்து விதைக்கும் அவ்விவசாயி அடுத்த வேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவிக்கும் அவலங்கள் எல்லாம் உண்டு இவ்வுலகில்.
உணவு என்றமட்டில் அவன் உண்பது ஒன்றும் பாலும் தேனும் ஊரும் அறுசுவை உணவு அன்று.

பழைய சோற்றுகஞ்சியும் கூழ் வகைகள் தான்.
அவற்றை உண்டும் திடம்கொண்டவனாய் நிலத்தை உழுது பயிரை உயிர்வித்து நம் வாழ்விற்கான வாழ்வாதாரத்தை அவன் விளைவித்தான். ஆனால் இன்றோ அவன் அவ்வொரு வேளை சோற்றுகஞ்சிக்கும் வழி இல்லாமல் திண்டாடும் அவலங்களை தினம்தோறும் காண்கிறோம்.
அவன் தினம் தினம் அனுபவிக்கும் கொடுமைகளைச் சொல்லிமாளாது.

நல்ல பருவமழை பொழியாமல்..

பொழிந்தும் அதை தன் வயலிற்கு உபயோக படுத்த போதிய வழிகள் இல்லாமல்..

சில நேரம் நல்ல விளைச்சல் இல்லாமல்..

நல்ல விளைச்சல் இருந்தால் நல்ல விலை இல்லாமல்..

விதை,உரம் வாங்க பணம் இல்லாமல்..

தான் விதைத்த பொருளுக்கு தான் விலை நிர்ணயிக்கும் வழி இல்லாமல்..

மேலே கூறப்பற்றவற்றைச் சமாளிக்க கடன் வாங்கி..

பின் அக்கடன் தொல்லைகளால் அல்லல் பட்டு..

போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல்..

தட்டித்தடுமாறும் அவ்வுழைக்கும் வர்க்கம் மெல்ல மெல்ல வேளாண்மையை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு செல்கின்றனர்..

தன் பிள்ளைகளின் வாழ்க்கையாவது சிறக்க வேண்டும் என்ற ஆசையோடு அவர்களும் வேறு துறைகளை தேர்வுச் செய்ய முனைகின்றனர்.
கடன்களை அடைக்க முடியாமல், பசிப்பட்டினியால் எத்துணை ஏழை விவசாயிகள் தற்கொலையைக் கண்டுவிட்டது இந்நாடு ????
அந்த விவசாயிக்கு உடுத்த நல்ல உடை இல்லை.. நமக்கு உண்ண உணவு தயாரிக்கும் அந்த உன்னத உலவனுக்கு வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை.
சேற்றில் விதைக்கின்றான்..

புழுதியில் வாழ்கிறான்..
ஆனால் அவன் விதைத்ததை உண்டு கொழுத்து திரியும் நாமோ அவனது கஷ்டங்களை ஒரு நாளும் நினைத்து பார்ப்பதில்லை.
சக மானிடனே இவ்வாறு என்றால் அரசாங்கத்தை பற்றி சொல்லவா வேண்டும்?

அவன் விதைத்துக்கு தன் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயித்து அவனை கஷ்ட படுத்துகிறது. இப்பொழுது தான் சிறுது மனம் இறங்கி அவனது கடன்களைத் தள்ளுபடி செய்யும் நிலைக்கு வந்துள்ளது.
விவசாயத்திற்காக இல்லாவிடினும் அந்த ஏழை விவசாயிக்காகவாயினும் உழவு சிறக்க வேண்டும். அவன் வாழ்வும் சிறக்க வேண்டும்.
இவ்வாறு உழவுக்கு ஆள் கூட இல்லாமல் திண்டாடும் அந்த உழவனுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் உதவ இக்கால தொழில்நுட்பர்களும் வல்லுனர்களும் முன் வர வேண்டும்.
விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நல்ல முனைப்புடன் நாம் அனைவரும் அவ்விவசயிக்கு நல்வினை ஊட்டும் நல்ல திட்டங்களை அரசு அமைத்து தர  வலியுறுத்தி நமக்கு வாழ்வாதாரம் தரும் அவனுக்கு நல்ல வாழ்விற்கான வழியை வழங்கிட உறுதிமொழி எடுப்போம்..!!

உழவும் நாடும் ஜொலிக்க வழி வகுப்போம்..!!

  • ஜ. முஹம்மது முஸ்ஸம்மில்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s